Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
பைனாப்பிள் சாதம்
இதுவரை கலவை சாதத்தை காய்கறிகளை வைத்து மட்டும் தான் செய்து இருப்போம். ஆனால் பழங்களை வைத்தும் சாதம் செய்யலாம். அதிலும் பழங்களில் அன்னாசியை வைத்து செய்யலாம். இதுவரை அன்னாசியை மில்க் ஷேக், கேக், ஐஸ் க்ரீம் மற்றும் சாலட்டில் பயன்படுத்தி மட்டும் தான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அந்த பழத்தை வைத்து சாதம் கூட செய்யலாம்.
இந்த சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். சரி, இப்போது அந்த பைனாப்பிள் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

சாதம் - 2 கப்
அன்னாசிப்பழம் - 1 கப் (சிறிதாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அன்னாசித் துண்டுகளை போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் இஞ்சியை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.
பின்பு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியை திறந்து, அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கி, சாதம் மற்றும் மிளகு தூள் போட்டு, நன்கு கிளறி 1 நிமிடம், எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
