பன்னீர் பஹடி

Posted By:
Subscribe to Boldsky

பன்னீர் பலருக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருள். அத்தகைய பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் இந்த பன்னீரை வித்தியாசமாக வீட்டிலேயே சமைத்து சப்பாத்தியுடன் சாப்பிடலாம். அதிலும் பன்னீர் பஹடி என்னும் ரெசிபியை வீட்டிலேயே செய்தால், வீட்டில் உள்ளோரை அசத்தி நல்ல பெயரை வாங்கலாம்.

சரி, இப்போது அந்த பன்னீர் பஹடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Paneer Pahadi Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம் (சதுரமாக வெட்டியது)

குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

புதினா - 1/4 கப் (நறுக்கியது)

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 4 பற்கள்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்

சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்

தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் பன்னீர், குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் வரிசைப்படுத்தி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு அடுப்பில் மிதமான தீயில் க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, பின் அதனை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!!!

English summary

Paneer Pahadi Recipe

Try out this recipe of paneer pahadi and treat yourself with this sumptuous delight.
Story first published: Friday, January 30, 2015, 17:57 [IST]