சிம்பிளான... வெங்காயம் தக்காளி குழம்பு

By: Usha Srikumar
Subscribe to Boldsky

மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளாக ஏதேனும் குழம்பு செய்ய நினைத்தால், வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிம்பிளாக ஒரு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த வெங்காயம் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Onion Tomato Coconut Milk Kuzhambu

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)

தக்காளி - 2 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

புளிச்சாறு - 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கெட்டியான தேங்காய் பால் - 2 கப்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு

வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து தக்காளி மென்மையாக வதங்கும் வரை நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மல்லி தூள், மிளகாய் தூள், புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் தேங்காய் பாலை சேர்த்து குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், வெங்காயம் தக்காளி குழம்பு ரெடி!!!

English summary

Onion Tomato Coconut Milk Kuzhambu

Take a look at the recipe of onion tomato coconut milk kuzhambu recipe and give it a try.
Story first published: Friday, December 26, 2014, 13:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter