Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்
தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் பிரபலமானது. பொதுவாக ஊத்தாப்பம் அரிசியால் செய்யப்படும் ஒரு ரெசிபி. ஆனால் அரிசிக்கு பதிலாக, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடியவாறு ஓட்ஸ் கொண்டு, அருமையான முறையில் ஒரு ஆரோக்கியமான ஊத்தாப்பம் செய்யலாம். மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையுடன், வித்தியாசமான சுவையைக் கொண்டது.
இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 4 துண்டுகள்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/2 கப்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மேலே தூவுவதற்கு...
கேரட் - 1 (தோலுரித்து, துருவியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கோதுமை பிரட்டை சுற்றியுள்ள பகுதியை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில், மேலே தூவுவதற்கு என்று கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் அரைத்த ஓட்ஸ், பிரட் பொடி, ரவை, சமையல் சோடா, உப்பு, சீரகம், தயிர் சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று சற்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் கேரட் கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications