ஓட்ஸ் தேங்காய் தோசை

Posted By:
Subscribe to Boldsky

காலையில் சாப்பிடுவதற்கு இட்லி, தோசை தான் மிகவும் சிறந்தது. இத்தகைய இட்லி மற்றும் தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு தோசையில் ஒரு வெரைட்டியான ஓட்ஸ் தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்ஸ் தேங்காய் தோசையானது டயட்டில் இருப்போருக்கு ஏற்றது.

குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது ஓட்ஸ் தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Oats Coconut Dosa Recipe

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

ஓட்ஸ் பவுடர் - 1 கப்

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ஓட்ஸ் பொடி, பச்சை மிளகாய், தேங்காய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின் மறுநாள் காலையில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் தேங்காய் தோசை ரெடி!!!

English summary

Oats Coconut Dosa Recipe

Oats and coconut dosa recipe is healthy. This oats dosa recipe is popular. Oats dosa recipe is Indian. Read to know how to make oats dosa.
Story first published: Friday, November 28, 2014, 6:04 [IST]
Subscribe Newsletter