Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
மொச்சை பட்டாணி பொரியல்
பலருக்கு மொச்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மொச்சையை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். அத்தகைய மொச்சையை பட்டாணியுடன் சேர்த்து பொரியல் போன்று செய்து மதியம் சாதத்துடன் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த மொச்சை பட்டாணி பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மொச்சை - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
பூண்டு - 2-3 பற்கள்
பச்சை மிளகாய் - 1
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மொச்சை மற்றும் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, உலர்ந்த மொச்சை மற்றும் பட்டாணி என்றால் 5-7 விசிலும், அதுவே பிரஷ் மொச்சை மற்றும் பட்டாணி எனில் 1 விசிலும் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள மொச்சை மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி, சாம்பார் பொடி, சோம்பு பொடி, மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, சிறிது தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியில் மூடியைத் திறந்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு 2-3 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மொச்சை பட்டாணி பொரியல் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
