For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல்: மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரன்

By Maha
|

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரபலமானது. இந்த பண்டிகையன்று நிறைய உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். அப்படி படைக்கும் உணவுகளில் மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரனும் ஒன்று. தோரன் என்றால் தமிழில் பொரியல் என்று பொருள்.

இந்த மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரனை ஓணம் பண்டிகையன்று மட்டுமின்றி, மற்ற தினங்களிலும் மதிய வேளையில் உணவுகளுக்கு சைடு டிஷ்ஷாக சமைத்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mixed Thoran Recipe

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீட்ரூட் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின்பு முட்டைகோஸ், கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு தூவி, நன்கு கிளறி விட்டு, 10 நிமிடம் மூடி வைத்து, வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரன் ரெடி!!!

குறிப்பு:

இந்த ரெசிபியில் விருப்பமான எந்த ஒரு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

English summary

Mixed Thoran Recipe

Onam is the the biggest festival celebrated in Kerala. On the day of Onam, a certain set of dishes are specially prepared and served. This feast is called the Onam Sadya. And mixed vegetable thoran is one of the main components of any Onam Sadya. Thoran basically means Poriyal.
Story first published: Thursday, September 12, 2013, 14:54 [IST]
Desktop Bottom Promotion