Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
புதினா மல்லி சப்பாத்தி
காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள புதினா மல்லி சப்பாத்தியை செய்து கொடுங்கள். இந்த ரெசிபியை மதிய வேளையில் கூட சாப்பிடலாம்.
குறிப்பாக எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த புதினா மல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகப் பொடி, பெருங்காயத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
பின்பு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து, அதன் நடுவே வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, நான்கு புறமும் மடக்கி, மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான புதினா மல்லி சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications