For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு இருக்கா? அப்ப மசாலா ரவை இட்லியை செஞ்சு சாப்பிடுங்க...

By Maha
|

மசாலா ரவை இட்லி என்பது ரவையை வைத்து செய்யப்படும் ஒரு ஆரோக்கியமான காலை உணவு. இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக இட்லியானது அரிசி மாவு மற்றும் ஊளுத்தம் பருப்பு மாவு கொண்டு தான் செய்வார்கள். ஆனால் இந்த இட்லியானது ரவையை மையமாக கொண்டு செய்வதால், இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மேலும் இதனை ஆரோக்கியமான நாளை துவங்குவதற்கு ஏற்ற காலை உணவு என்றும் சொல்லலாம். இப்போது அந்த மசாலா ரவை இட்லியின் செய்முறையைப் பார்ப்போம்.

Masala Rava Idli Recipe: Breakfast

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப் (வறுத்தது)
புளித்த தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பௌலில் புளித்த தயிர், வறுத்த ரவை மற்றும் உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கலந்து, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு துருவிய கேரட் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனை ஊற வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறி விட வேண்டும்.

பின் சுவை பார்த்து, உப்பு போதவில்லை என்றால், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிப்பதற்குள், இட்லி தட்டில் ரவை கலவையை இட்லிகளாக ஊற்றி, அதன் மேல் முந்திரியை வைக்க வேண்டும்.

இறுதியில் இட்லி பாத்திரத்தை திறந்து, அதில் இந்த இட்லி தட்டை வைத்து, மீண்டும் மூடி 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா ரவை இட்லி ரெடி!!! இதனை புதினா அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

English summary

Masala Rava Idli Recipe: Breakfast

Masala Rava Idli is nutritional and provides you with a lot of energy too. Consuming this healthy breakfast, you will see that the start of your day will be energetic. Rava is one of the best ingredients for diabetic patients too. Take a look at how you can prepare this healthy breakfast recipe, masala rava idli.
Story first published: Thursday, October 24, 2013, 19:14 [IST]
Desktop Bottom Promotion