Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
தென்னிந்திய உணவுகள் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இட்லி மற்றும் தோசை தான். அதிலும் பிரபலமான இட்லி மற்றும் தோசைகள் மிகவும் ஆரோக்கியமானவையும், சத்தானவையும் கூட. ஏனெனில் அதில் உளுந்து மற்றும் அரிசி கலந்திருப்பதால், அவை உடலுக்கு வலிமையைத் தருகிறது. எனவே தான் தென்னிந்திய மக்கள் இளமையோடும், வலிமையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இதுவரை நாம் இட்லிகளை சட்னி மற்றும் சாம்பாருடன் தான் தொட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது உள்ள நவீன உலகிற்கேற்ப, நவீன இட்லிகள் பல வந்துள்ளன. இத்தகைய இட்லிகளில் உளுந்து மற்றும் அரிசியுடன், காய்கறிகளும் சேர்க்கப்பட்டு பலவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. சில இட்லிகளுக்கு உளுந்து மற்றும் அரிசியே தேவைப்படாது. மேலும் சில வகையில், இட்லிகளை சுட்டுவிட்டு, மீதமுள்ளவற்றை உப்புமா செய்யாமல், வேறு வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடலாம்.
சரி, இப்போது அத்தகைய வித்தியாசமான சுவையுடைய 7 இட்லிகளைப் பற்றியும் அதன் செய்முறையையும், உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்.

பச்சை பட்டாணி இட்லி
வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் பச்சை பட்டாணி இட்லியை சீக்கிரம் செய்யலாம்.

ரவை இட்லி
அரிசி மற்றும் உளுந்து இல்லாமல், காலையில் சீக்கிரம் இட்லி செய்ய வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ரவை இட்லி சரியானதாக இருக்கும்.

காய்கறி இட்லி
அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பெரும்பாலான வீடுகளில் செய்வது தான். ஆனால் சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும், பருப்பையும், காய்கறிகளையும் சேர்த்து ஊட்டச்சத்து மிக்க இட்லியை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்.

தக்காளி இட்லி
இட்லி பிடிக்காத குழந்தைகளுக்கு தக்காளியை மையமாக வைத்து, ஒரு இட்லியை செய்து கொடுத்தால், அதை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஃப்ரைடு இட்லி
ஃப்ரைடு இட்லி மிகவும் ருசியானது. இதற்கு எந்த ஒரு சட்னியோ அல்லது சாம்பாரோ தேவையில்லை. அதிலும் இதனை காலை வேளையில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுத்தனுப்ப ஏற்ற ஒரு டிஷ்.

ரவை சேமியா இட்லி
காலையில் அவசரமாக ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது வீட்டில் ரவை மற்றும் சேமியா இருந்தால், எளிதான முறையில் ஒரு இட்லி செய்யலாம்.

இட்லி மஞ்சூரியன்
இட்லிகளை அளவுக்கு அதிகமாக சுட்டுவிட்டால், மீதமுள்ளவற்றை தூக்கிப் போடாமல், அதனை வைத்து இதுவரை உப்புமா தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications