Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கேரளத்து விசு கஞ்சி
கேரளாவில் விசு என்னும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் ரெசிபி தான் விசு கஞ்சி. இது சிவப்பு அரிசி, பச்சரிசி மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான கஞ்சி.
இந்த கேரளத்து விசு கஞ்சியை மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம். இங்கு அதை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உனக்கலரி/கேரளா சிவப்பு அரிசி - 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
மொச்சை - 1/4 கப்
தேங்காய் பால் - 2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மொச்சையை பொன்னிறமாக வறுத்து, சுடுநீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் அதனை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு அரிசியையும், குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கி, மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேங்காய் பால் சேர்த்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து, பின் மொச்சையை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரளத்து விசு கஞ்சி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
