For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தான சன்னாக்கடலை சுண்டல்

By Mayura Akilan
|

Channa Sundal Recipe
குழந்தைகளுக்கு உண்ணக்கொடுக்கும் உணவு சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் சன்னாக்கடலை சுண்டல் தயாரித்து கொடுக்கலாம். இது சுவையோடு ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

தேவையான பொருட்கள்

சன்னாக்கடலை கால் கிலோ

சின்னவெங்காயம் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

கடுகு, உளுந்து – 1 டீ ஸ்பூன்

எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

துருவிய தேங்காய் அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சன்னா கடலையை 6 மணிநேரம் ஊற வைக்கவும். இதனை சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் சின்னவெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்த உடன் வேகவைத்த சுண்டலை தண்ணீரை வடித்து வாணலியில் போட்டு கிளறவும். அத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி இறக்கவும். சத்தான சன்னா சுண்டல் ரெடி. குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது.

English summary

Health Channa Sundal Recipe | சத்தான சன்னாக்கடலை சுண்டல்

Chana Sundal is a unique and delicious chana recipe. Prepare Chana Sundal by following this easy recipe.
Story first published: Friday, April 6, 2012, 15:31 [IST]
Desktop Bottom Promotion