Latest Updates
-
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
பேபிகார்ன் காளான் சில்லி
மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு, உடலுக்கு ஆரோக்கியமாகவும், சைனீஸ் ஸ்டைல் சுவையிலும் இருக்கும் வகையில் பேபிகார்ன் மற்றும் காளானை வைத்து சில்லி செய்து சாப்பிடலாம்.
பொதுவாக இதனை சாதத்துடனோ அல்லது நூடுல்ஸ் உடனோ தான் சாப்பிடுவார்கள். ஆனால் இதனை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம். இப்போது அந்த பேபிகார்ன காளான் சில்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 1 கப் (நறுக்கியது)
பேபிகார்ன் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பேபிகார்னையும் நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வதக்கி, காளான், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 5-7 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அத்துடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தட்டை வைத்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து, அதில் சோள மாவு மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, நன்கு தண்ணீர் சுண்டும் வரை கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான பேபிகார்ன் காளான் சில்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications