Latest Updates
-
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்..
செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல்
மதியம் வீட்டில் சாம்பாருக்கு செட்டிநாடு சைடு டிஷ் செய்ய ஆசைப்பட்டால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, காரமாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பொடி மசாலாவிற்கு...
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 7
மிளகு - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
தேங்காய் - 1/4 கப்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் கத்திரிக்காயை நீரில் கழுவி, மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல், பாதியாக வெட்டிவிட்டு, பின் பூமொட்டு விரிவது போன்று 4-6 ஆக கீறிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை கத்திரிக்காயின் உள்ளே தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி, சற்று மொறுமொறுவென்று வந்த பின், அதனை இறக்கினால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!
Image Courtesy: pinterest



Click it and Unblock the Notifications











