Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
செட்டிநாடு மாங்காய் கார குழம்பு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - செமையா இருக்கும்
Chettinad Manga Kara Kulambu Recipe in Tamil: சாம்பாருக்கு அடுத்தப் படியாக பெரும்பாலான வீடுகளில் வைப்பது கார குழம்புதான். தற்போது மாங்காய் சீசன் தொடங்கி விட்டதால் மாங்காயை வைத்து ஒரு முறை கார குழம்பு செய்து பாருங்கள். மாங்காயை வைத்து கார குழம்பு செய்யலாம் என்பது பலரும் அறியாத ரெசிபியாகும். அதிலும் இந்த மாங்காய் கார குழம்பு செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும்.

வெண்டைக்காய், கத்திரிக்காய் வைத்தே கார குழம்பு வைத்து போரடித்து விட்டதா? ஆம் எனில், அப்படியே செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாங்காய் காரக் குழம்பு வைக்க முயற்சி செய்யுங்கள். இந்த செட்டிநாடு ஸ்டைல் காரக் குழம்பு சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. சூடான சாதத்துடன் இந்த குழம்பை சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த குழம்பை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு சுவையான செட்டிநாடு ஸ்டைல் மாங்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மாங்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்துங்க.
தேவையான பொருட்கள்:
- மாங்காய் - 2 (நீளவாக்கில் கீறி வைத்து கொள்ளவும்)
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- அரிசி கழுவிய நீர் - 2 கப்
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 6
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி கழுவிய நீரை எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளியை சேர்க்கவும்.
- மாங்காயை மூன்று துண்டுகளாக கீறி வைத்துக் கொள்ளவும்.
- இந்த மாங்காயை அரிசி கழுவிய நீரில் சேர்த்து, மாங்காய்கள் நன்கு வேகும் வரை மூடி வைத்துச் சமைக்கவும். மாங்காய்கள் அதிகப்படியாக வெந்து குழைந்துவிடாமல் இருக்க வேண்டும்.
- மாங்காய் கொதிக்கும்போது, 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆற விடவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.
- மாங்காய்கள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள இந்த பொடியைச் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்; இப்போது ஒரு இனிமையான நறுமணம் வெளிப்படும்.
- இந்த குழம்பு சற்று தண்ணீர் பதத்தில் இருந்ததால்தான் நன்றாக இருக்கும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
- இறுதியாக இந்த தாளிப்பை குழம்பின் மீது ஊற்றி நன்றாக கிளறினால் சுவையான மாங்காய் கார குழம்பு ரெடி.
- இதை அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு அதன்பின் சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications
