Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
பாகற்காய் எள்ளு பச்சடி
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியான பாகற்காயை எப்போதும் குழம்பு, பொரியல் என்று மட்டும் செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக பச்சடி செய்து சாப்பிடலாம். இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அதிலும் இதில் எள்ளு சேர்ப்பதால், இதன் சுவை வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மதிய வேளையில் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இப்போது அந்த பாகற்காய் எள்ளு பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
துவரம் பருப்ப - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
எள் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாகற்காயை இரண்டாக நறுக்கி, அதில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின் கொதிக்கும் நீரில் அதனைப் போட்டு 1-2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்ப, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் எள் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சேர்த்து சிறிது நேரம் வாக்க வேண்டும்.
பின்பு புளிச்சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, இறுதியில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி கிளறி, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பாகற்காய் எள்ளு பச்சடி ரெடி!!!



Click it and Unblock the Notifications
