For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடலை மாவு சப்பாத்தி

By Maha
|

Besan rotti
இதுவரை சப்பாத்தியை கோதுமை மாவு அல்லது மைதா மாவில் செய்திருப்போமே தவிர, கடலை மாவில் செய்திருப்போமா? ஆனால் சற்று வித்தியாசமாக சூப்பரான சுவையில், காலை வேளையில் எளிதில் செய்யும் வகையில், கடலை மாவை வைத்து ஒரு சப்பாத்தி செய்யலாம். இப்போது அந்த கடலை மாவ வைத்து எப்படி சப்பாத்தி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்மல்லி - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள், மாங்காய் தூள், உப்பு, கொத்தமல்லி மற்றும் சீரகத்தை போட வேண்டும்.

பின்பு 1 கப் தண்ணீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த நீரை மாவில் ஊற்றி, பிசைய வேண்டும்.

பிறகு சிறிது நெய் ஊற்றி, மாவை நன்கு மென்மையாக பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

மாவானது ஒரு 10 நிமிடம் ஊறியதும், அதனை சப்பாத்தி போல்

பின்னர் ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள ரொட்டியை முன்னும் பின்னும் நெய் தடவி வேக வைத்து எடுக்க வேண்டும். இதே போல் அனைத்து ரொட்டியையும் செய்ய வேண்டும்.

இப்போது சுவையான கடலை மாவு சப்பாத்தி ரெடி!!! இதனை ஊறுகாயுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Besan Rotti | கடலை மாவு சப்பாத்தி

Besan ki roti is an excellent Indian breakfast dish. This breakfast recipe cooks very quickly. Even if you are a working woman, you can cook this roti in just few minutes.
Desktop Bottom Promotion