Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
சுவையான... வெங்காய புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப் (1/2 மணிநேரம் ஊறவைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
பட்டை - 1
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6 (தோலுரித்தது)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை ஊற்றி, சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தை போட்டு, கிராம்பு மற்றும் பட்டையை போட்டு, நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அத்துடன் கேரட் மற்றும் பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் பாசுமதி அரிசியை கழுவி, அதோடு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். வதக்கியதும் அதில் 3 கப் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், சர்க்கரை மற்றும் வேக வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனை வெந்து கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து கலந்து, மற்றொரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது சுவையான வெங்காய புலாவ் ரெடி!!! இதனை ஊறுகாய் அல்லது ஏதேனும் ஒரு சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
