பச்சை பட்டாணி கொண்டு செய்யக்கூடிய அருமையான 9 ரெசிபிக்கள்!!!

By Maha

குளிர்காலத்தில் மார்கெட்டிற்கு சென்றால், பச்சை பட்டாணியானது விலை குறைவிலேயே கிடைக்கும். ஏனெனில் இது பச்சை பட்டாணி சீசன். ஆகவே பச்சை பட்டாணி சீசனின் பொழுது, அதனைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்து சாப்பிடுங்கள். இதனால் பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள அனைத்து சத்துக்களையும் பெற முடியும். குறிப்பாக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும், இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.

அதுமட்டுமல்லாமல், எந்நேரமும் எந்த உணவை சாப்பிடுவது நல்லது என்று ஆராய்ந்து உண்ணும் நீரிழிவு நோயாளிகள் கூட பச்சை பட்டாணியை பயப்படாமல் சாப்பிடலாம். இதுப் போன்று எண்ணற்ற நன்மைகள் பச்சை பட்டாணியில் நிறைந்துள்ளன. இங்கு அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒருசில ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை பச்சை பட்டாணி சீசன் முடிவதற்குள் முயற்சி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
<a href=பச்சை பட்டாணி சப்பாத்தி" title="பச்சை பட்டாணி சப்பாத்தி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பச்சை பட்டாணி சப்பாத்தி

குளிர்காலத்தில் உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். அதிலும் பச்சை பட்டாணி கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய நோயெதிர்ப்பு சக்தி கிடைத்து, நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படியெனில் பச்சை பட்டாணியில் அத்தகைய சத்து நிறைந்துள்ளது.

செய்முறை

<a href=பட்டாணி பன்னீர் கிரேவி" title="பட்டாணி பன்னீர் கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பட்டாணி பன்னீர் கிரேவி

இதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கான மற்றொரு ரெசிபி. பெரும்பாலான நேரங்களில் சுவையில்லாத உணவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டியிருப்பதால், இந்த ரெசிபி அவர்களுக்கு ஒரு விருந்து போன்று இருக்கும்.

செய்முறை

<a href=வெந்தயக்கீரை பட்டாணி மலாய் ரெசிபி" title="வெந்தயக்கீரை பட்டாணி மலாய் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

வெந்தயக்கீரை பட்டாணி மலாய் ரெசிபி

வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களை அசத்த வேண்டுமா? அப்படியானால் வெந்தயக்கீரை மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான ரெசிபியை செய்யுங்கள்.

செய்முறை

<a href=பட்டாணி புலாவ்" title="பட்டாணி புலாவ்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பட்டாணி புலாவ்

வீட்டில் பச்சை பட்டாணி இருக்கும் போது, காலையில் வேகமாக ஒரு காலை உணவை சமைக்க நினைத்தால், பச்சை பட்டாணி கொண்டு செய்யப்படும் புலாவ் ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.

செய்முறை

<a href=காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு" title="காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு

காளான் மிகவும் பிடிக்குமா? அப்படியானால், காளானுடன் பச்சை பட்டாணியை சேர்த்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அசைவ உணவு உண்ட திருப்தியைக் கொடுக்கம்.

செய்முறை

<a href=பட்டாணி குருமா" title="பட்டாணி குருமா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பட்டாணி குருமா

வெறும் பட்டாணியை வைத்தும் அருமையான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமாவை சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

செய்முறை

<a href=பச்சை பட்டாணி நிமோனா" title="பச்சை பட்டாணி நிமோனா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பச்சை பட்டாணி நிமோனா

வட இந்தியாவில் இருப்பவர்கள் தான் பச்சை பட்டாணி நிமோனாவை கேள்விப்பட்டிருக்க முடியும். மற்றபடி வேறு எவருக்கும் இதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரெசிபி உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இதுவும் குழம்பு போன்றது தான். சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு வித்தியாசமான குழம்பு தான் பட்டாணி நிமோனா.

செய்முறை

<a href=காளான் பட்டாணி சப்பாத்தி" title="காளான் பட்டாணி சப்பாத்தி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

காளான் பட்டாணி சப்பாத்தி

உலகில் எத்தனையோ வகையான சப்பாத்திக்கள் உள்ளன. அதில் ஒரு வகை தான் காளான் பட்டாணி சப்பாத்தி. இந்த சப்பாத்தி மிகவும் சுவையாக இருப்பதோடு, நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடியது.

செய்முறை

<a href=பட்டாணி கோப்தா" title="பட்டாணி கோப்தா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>

பட்டாணி கோப்தா

கோப்தாவில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அதில் பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion