Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பச்சை பட்டாணி நிமோனா
வட இந்தியாவில் இருப்பவர்கள் தான் பச்சை பட்டாணி நிமோனாவை கேள்விப்பட்டிருக்க முடியும். மற்றபடி வேறு எவருக்கும் இதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரெசிபி உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இதுவும் குழம்பு போன்றது தான். சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு வித்தியாசமான குழம்பு தான் பட்டாணி நிமோனா.
இந்த மாதிரியான வித்தியாசமான ரெசிபியை ஏதேனும் விழாக்களின் போது செய்தால், விழாவே ஒரு வித்தியாசமாக இருக்கும். அதிலும் அன்னையர் தினம் வரப் போகிறது. இத்தினத்தன்று அன்பான அம்மாவை அமர வைத்து, அவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி நிமோனாவை செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 3 கப்
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 3-4
பிரியாணி இலை - 2
வரமிளகாய் - 2
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சைப் பட்டாணியை ஓரளவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளை 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, கரம் மசாலா தூவி கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி நிமோனா ரெடி!!! இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications