Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு
தென்னிந்தியாவில் பல வகையான குழம்புகள் உள்ளன. மதிய வேளையில் சாதத்திற்கு அத்தகைய குழம்புகளை சேர்த்து சாப்பிட்டால் தான் பலருக்கும் வயிறு நிறையும். அந்த வகையில் சூப்பரான அசைவ சுவையில் ஒரு சைவ குழம்பை செய்ய நினைத்தால், அதற்கு காளான் பட்டாணி குழம்பு ஏற்றதாக இருக்கும்.
அந்த காளான் பட்டாணி குழம்பின் செய்முறையைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து வீட்டில் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 7-8
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை பட்டாணியைப் போட்டு, நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.
Image Courtesy: spiceupthecurry



Click it and Unblock the Notifications