For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாவை அடிமையாக்கும் கத்திரிக்காய் பச்சடி

By Sutha
|

கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. கத்திரிக்காயில் பலவிதமான டிஷ்களை செய்து அசத்தலாம், சாப்பிடலாம். அந்த வகையில் கத்திரிக்காய் பச்சடியும் ஒன்று. கத்திரிக்காய் பச்சடியின் சுவையை சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது, மாறாக சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும். அதிலும் எண்ணைக் கத்திரிக்காய் பச்சடியை சாப்பிட்டால் அதற்கு நிச்சயம் அடிமையாகி விடுவார்கள்.

சரி, சரி செய்முறைக்குப் போகலாமா...

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

கத்தரிக்காய் - 4

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப

கொத்தமல்லி இலை - சிறிதளவு


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

2. எண்ணெய் சூடானவுடன் சிறிது வெந்தயத்தைச் சேர்க்கவும்.

3. பின்னர் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போடவும்.

4. வெங்காயம் சிறிது வதங்கியவுடன், சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

5. அடு்த்து உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. இதற்கிடையே புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.

7. வதங்கிய வெங்காயம், தக்காளியுடன் நறுக்கிய கத்தரிக்காயை போடவும்.

8. கத்தரிக்காய் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, 1 அல்லது 2 விசில் வைக்கவும்.

9. விசில் வந்தவுடன் ஆவியை நீக்கிவிட்டு, அதில் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.

10. அவற்றை சுமார் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

11. அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலையை மேலாகத் தூவி மூடி வைக்கவும்.

இதோ சுவையான கத்தரிக்காய் பச்சடி. இதை சாதத்துடன் சாப்பிடலாம். இதில் மிளகாய் தூளுக்கு பதில் சாம்பார் பொடி சேர்க்கலாம்.

செஞ்சு பார்த்தாச்சா, சாப்பிட்டுச் சொல்லுங்க, எப்படி இருக்குன்னு...

English summary

How to prepare brinjal curry? | நாவை அடிமையாக்கும் கத்திரிக்காய் பச்சடி

Preparing brinjal curry is an easy task. Try this at your home and you will be appreciated for this tasty dish.
Story first published: Tuesday, December 21, 2010, 18:30 [IST]
Desktop Bottom Promotion