உடுப்பி ஸ்டைல் வெஜ் ஆம்லெட் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க... ஆரோக்கியமாவும், டேஸ்ட்டாவும் இருக்கும்...!

Posted By:

Udupi Veg Omelette Recipe in Tamil: முட்டையை என்னதான் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சிலருக்கு என்னவோ ஆம்லெட்டாக சாப்பிட தான் பிடிக்கும். சிலருக்கு கடைகளில் சாப்பிடும்போது கூட சைட் டிஷ் ஆக ஆம்லெட் சாப்பிடுவது பழக்கமாக இருக்கும். நாம் வீட்டில் குழந்தைகளுக்கும் முட்டை ஆரோக்கியமானது என்பதாலும், குழந்தைகளை சளி பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உணவில் மிளகை சேர்க்க என்னும் போதும் ஆம்லெட்டில் சேர்த்து கொடுப்பது எளிதாக இருக்கும்.

ஆனால் இந்த புரட்டாசி மாதத்தில் குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு ஆம்லெட் செய்து தருவது முடியாத ஒன்றாக இருக்கும். என்னதான் பெரியவர்கள் இதை புரிந்து கொண்டாலும் குழந்தைகள் இதை புரிந்து கொள்வது சற்று கடினம் தான். இது போன்ற சமயத்தில் குழந்தைகளை சமாளிக்க சில உணவு வகைகளை முட்டையின் சுவையில் நாம் செய்ய முடிந்தால் குழந்தைகளை எளிதாக சமாளிக்க முடியும். சரி வாங்க உடுப்பி வெஜ் ஆம்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Udupi Veg Omelette Recipe How to Make Udupi Veg Omelette

தேவையான பொருட்கள்:

- வெள்ளை சுண்டல் - 100 கிராம்
- பெரிய வெங்காயம் - 2 (மீடியம் அளவு)
- சமையல் சோடா - ¼ டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கருவேப்பில்லை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் - ½ டீ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
- மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- வெள்ளை சுண்டலை நன்றாக தண்ணீரில் அலசி முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- பச்சை மிளகாயையும் கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

- மிக்ஸி ஜாரில் ஊற வைத்த சுண்டல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடித்து வைத்த முட்டை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

- அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மட்டும் கருவேப்பில்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

- பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், மற்றும் சமையல் சோடா சேர்த்து கொள்ளவும்.

- கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஆம்லெட் முட்டை பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளவும்.

- தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக விடவும்.

- பின் மாவை எடுத்து சிறிய வட்டமாக ஊற்றி வேக விடவும். பெரிதாக ஊற்றினால் திருப்பி போடும் போது உடைத்து போகும்.

- ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு இன்னொரு புறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான உடுப்பி வெஜ் ஆம்லெட் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 7, 2025, 17:10 [IST]
Desktop Bottom Promotion