Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
Tomato Rava Dosa Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? காலையில் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவையும், தக்காளியும் இருக்கா? அப்படியானால் அந்த ரவையையும், தக்காளியையும் வைத்து ஒரு இன்ஸ்டன்ட் தக்காளி ரவா தோசையை செய்யுங்கள்.
இந்த தக்காளி ரவா தோசை செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் இதற்கு தேங்காய் சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரவா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி - 2
* வரமிளகாய் - 4
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர்ஜாரில் பொடியாக நறுக்கிய தக்காளி, வரமிளகாய்,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஒரு கப் ரவை, 1/4 கப் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து
ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 1/4 டீஸ்பூன் சமையல்
சோடாவை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி நன்கு தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி தோசை தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications










