Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Tiffin Centre Tiffin Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு அருமையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் டிபன் சென்டர் டிபன் சாம்பார் செய்யுங்கள். இந்த டிபன் சாம்பார் ஒரு தனி ருசியில் இருக்கும். இப்படி இந்த டிபன் சென்டர் சாம்பார் மட்டும் ருசியாக இருப்பதன் ரகசியம், அதில் வறுத்து அரைத்து சேர்க்கப்படும் மசாலா தான். இந்த சாம்பாரை செய்தால், இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு டிபன் சென்டர் டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டிபன் சென்டர் டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 5-6 கப்
* தக்காளி - 2
* பூண்டு - 4-5
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
சாம்பார் மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* பட்டை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 2 கையளவு
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது + தேவையான அளவு
* சாம்பார் பொடி
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* வெல்லம் - சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டு
நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 5-6 கப் நீரை ஊற்றி, அத்துடன் நறுக்கிய தக்காளி, பூண்டு,
மஞ்சள் தூள், எண்ணெய் ஊற்றி கலந்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு சாம்பார் மசாலா அரைப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு, வெந்தயம், வரமிளகாய், பட்டை, சீரகம், மிளகு ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் பெருங்காயத் தூள் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து,
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா
முழுவதையும் சேர்த்து கிளறி, நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் குக்கரில் உள்ள பருப்பை நன்கு மசித்துவிட்டு, இந்த
காய்கறி கலவையை அப்படியே குக்கரில் சேர்த்து, சாம்பாருக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் கொத்தமல்லியைத் தூவி, வெல்லத்தை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான டிபன் சென்டர் டிபன் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications