வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..

Krishna Jayanthi 2026: ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் தான் பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இந்த கிருஷ்ணர் பிறந்த தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Krishna Jayanthi 2026 5 Vastu Items of Lord Krishna To Keep In Office Or Shop For Success And Profit

இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவதோடு, வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதையின் வேடமிட்டு கொண்டாடுவார்கள். இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரத்திரமும் ஒரே நாளில் வருகிறது

இந்நாளில் நீங்கள் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், பெரிய அளவில் லாபத்தையும் காண விரும்பினால், வாஸ்துப்படி கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வாங்கி கடை அல்லது அலுவலகங்களில் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், அது வாஸ்து குறைபாடுகளை நீக்கி, தொழில் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். இப்போது தொழில் வளர்ச்சிக்காக பகவான் கிருஷ்ணனுக்கு பிடித்த எந்த பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

1. புல்லாங்குழல்

கிருஷ்ணன் எப்போதும் கையில் வைத்திருக்கும் ஒரு பொருள் தான் புல்லாங்குழல். வாஸ்துப்படி வியாபாரத்தில் உள்ள தடைகளை நீக்க புல்லாங்குழல் உதவுவதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை செய்வதற்கு முன் வாங்கி வைத்து, கடை அல்லது அலுவலகத்தின் வடகிழக்கு திசையிலோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ வாங்கி வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகளை அகற்றும்.

2. காமதேனு பசு சிலை

உங்கள் கடை அல்லது அலுவலகத்தில் எதிர்பார்த்த பண வரவு இல்லையா? அப்படியானால் காமதேனு பசு மற்றும் கன்று சிலையை வாங்கி, வடக்கு அல்லது கிழக்கு மூலையில் வையுங்கள். அதுவும் இந்த சிலையானது பித்தளை அல்லது வெள்ளியால் ஆனதாக இருப்பது நல்லது. வாஸ்துப்படி இந்த சிலையானது பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, வியாபாரத்தை விரிவடையச் செய்யும்.

3. மயில் இறகு

கடை அல்லது அலுவலகத்தில் கண் திருஷ்டியைப் போக்கவும், எதிர்மறை ஆற்றலை தடுக்கவும் மயில் இறகு சக்தி வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அதுவும் அந்த மயில் இறகை பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பண கவுண்டரிலோ வைக்கவும். முக்கியமாக வடகிழக்கு திசையில் இதை வைக்க வேண்டும். இது ராகுவின் தீயவிளைவுகளை தடுத்து, நல்ல லாபத்தைத் தரும்.

4. சிறிய வெள்ளிப் பானை

கிருஷ்ணருக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். இந்த வெண்ணெயை வெள்ளிப் பானையில் வைத்து கிருஷ்ண ஜெயந்தி பூஜையின் போது வைத்து படைத்த பின், அந்த பானையை பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது கடையில் வடக்கு பார்த்து இருக்கும் லாக்கரிலோ வைக்கவும். இப்படி செய்யும் போது பணவரவு ஒருபோதும் குறையாது மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கத் தொடங்குவதாக நம்பப்படுகிறது.

5. வைஜெயந்தி மாலை

வைஜெயந்தி மாலை வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த மாலையை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு அருகில் வைத்து பூஜை செய்த பின், அதை கடை அல்லது அலுவலகத்தில் பணப்பெட்டி அல்லது கம்ப்யூட்டர் முன் வைக்கவும். இது வியாபாரத்தில் நல்ல முடிவுகளை எடுக்கவும், சிக்கிய பணத்தை மீட்கவும், புதிய வருமான வழிகளை உருவாக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த மாலை இருக்கும் இடத்தில் வாஸ்து குறைபாடுகள் நீங்குவதாக கூறப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, September 4, 2026, 18:15 [IST]
Desktop Bottom Promotion