Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ரோட்டுக்கடை தோசை சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து நீங்களும் ட்ரை பண்ணுங்க..
Rottukadai Dosa Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார் தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் தான் பிடிக்குமானால், ரோட்டுக்கடை தோசை சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும்.
ஏனெனில் இந்த சாம்பார் பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படுகிறது. மேலும் இதில் புளிப்புச் சுவைக்கு தக்காளியும், முக்கியமாக சாம்பாரின் சுவையை கூட்ட மஞ்சள் பூசணியும் சேர்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இது தான் இந்த சாம்பாரின் சுவைக்கு முக்கிய காரணம். இப்படியொரு சாம்பாரை வீட்டில் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக சாப்பிடாத குழந்தைகளுக்கும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த ரோட்டுக்கடை தோசை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தோசை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கேரட் - 1 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணி - 1/2 கப் (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை
மிளகாய், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், மஞ்சள் பூசணி, சாம்பார் தூள், மஞ்சள்
தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சாம்பாருக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும்
சாம்பாருடன் சேர்த்து கலந்து, 2 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ரோட்டுக் கடை தோசை சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications