Just In
- 47 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 2 hrs ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- Sports
செஸ் ஒலிம்பியாட் 2022: பதக்கம் வென்றவர்கள் யார் யார்? இந்தியாவின் நிலை என்ன? - முழு பதக்கப்பட்டியல்!
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Finance
ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
தவா மஸ்ரூம்
நீங்கள் காளான் பிரியரா? காளானை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் தவா மஸ்ரூம் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள். இந்த தவா மஸ்ரூம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு தவா மஸ்ரூம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தவா மஸ்ரூம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 1/2 கப் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கெட்டி தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* முந்திரி - 10
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி மற்றும் கசகசா விதைகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் குடைமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி 6-8 நிமிடம் அல்லது காளான் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், தவா மஸ்ரூம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi