Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Mangai Pachadi Recipe : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - இனிப்பு மாங்காய் பச்சடி
Tamil New Year 2023: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கு மாங்காய் விற்கப்படுவதைக் காணலாம். பொதுவாக மாங்காய்க்கு என்று தனிப்பிரியர்கள் உண்டு. மாம்பழத்தை விட மாங்காயை பலர் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்படிப்பட்ட கோடைக்காலத்தின் தொடக்கத்தில் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆகவே இந்த தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி அனைத்து வீடுகளிலும் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாங்காய் பச்சடியை அப்படியே சாப்பிடலாம் அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். உங்களுக்கு மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தமிழ் புத்தாண்டு அன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் - 1
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வேப்பம்பூ - சிறிது
செய்முறை:
* முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, மாங்காய் துண்டுகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
* இப்போது மாங்காய் நன்கு மென்மையாக வெந்து இருக்கும். இந்நிலையில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி நன்கு வெந்துள்ள மாங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.
* வேண்டுமானால் இத்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, மாங்காயுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து 10 நொடிகள் வதக்கி விடுங்கள்.
* இறுதியாக தாளித்ததை மாங்காய் பச்சடியில் சேர்த்து கிளறினால், மாங்காய் பச்சடி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications












