Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி
தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி செய்வது வழக்கம். உங்களுக்கு மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாங்காய் பச்சடி ரெசிபியின் செய்முறையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாம்பழம், மாங்காய் சீசன் என்றாலே அது கோடைக்காலம் தான். அந்த கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதோடு தமிழ் புத்தாண்டும் வரப்போகிறது. இந்த தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி செய்வது வழக்கம். உங்களுக்கு மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாங்காய் பச்சடி ரெசிபியின் செய்முறையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாங்காய் பச்சடியை சாதாரண நாட்களிலும் செய்து, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக மாங்காய் பச்சடியை செய்து சுவைத்த பின்னர், எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் - 1
* பாகு வெல்லம் - 1/3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (வெட்டியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாங்காயை கழுவி தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் உள்ள மாங்காயுடன் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகு சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் ஜாம் பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள மாங்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், மாங்காய் பச்சடி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
