For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான உப்பு சீடை

By Mayura Akilan
|

Sweet Recipe
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் திண்பண்டம் தர வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக மெனக்கெடுவர். தினசரி புதிது புதிதாக எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பர் குழந்தைகள். அவர்களுக்கு பிடித்தமான நொறுவைகளை கொடுத்தால் நொடியில் காலி செய்துவிடுவர் குழந்தைகள். வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சத்தான சிநாக்ஸ் உப்பு சீடை குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் ஏற்றது. இது கிருஷ்ண ஜெயந்தி தினந்தன்று அநேக வீடுகளில் செய்யப்படும் பலகாரமாகும்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை: முதலில் அரிசியை களைந்து உலர்த்தவேண்டும். நன்றாக காய்ந்ததும், மாவாக அரைத்து , சலித்து வைக்கவும். எள்ளை சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.

அகலமான ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.வெண்ணை நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும் .

மாவு நல்ல கெட்டி பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவினை லேசாக எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை" யாக உருட்டிவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான 'உப்பு சீடை ' ரெடி . எளிதில் தயாரிக்கலாம்.

சீடை தயாரிப்பதில் முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். அதில் கல், மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக அரைத்த மாவினை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும் ஆபத்து உள்ளது.

English summary

Salt Uppu Seedai Recipe | சுவையான உப்பு சீடை

salt seedai is an Indian snack recipe. This is Krishna Jayanthi pooja savory dish stands for in India.
Story first published: Tuesday, February 21, 2012, 15:22 [IST]
Desktop Bottom Promotion