For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவா லட்டு ரெஸிபி

By Mayura Akilan
|

Rava laddu
பள்ளி விடுமுறை விட்டாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதிக செலவில்லாத இனிப்பு, காரம் என்றால் பட்ஜெட்டிற்கும் பிரச்சினை இருக்காது நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை - ஒரு கப்
நெய் – 4 டீ ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி செய்தது - கால் ஸ்பூன்
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10
சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை

அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம்.

சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

English summary

Rava laddu recipe | ரவா லட்டு ரெஸிபி

Rava laddu is an Indian specialty traditionally made during almost all festivals. Extremely simple to make .
Story first published: Thursday, April 5, 2012, 11:33 [IST]
Desktop Bottom Promotion