For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்( வீடியோ)

இது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது.

By Batri Krishnan
|

இது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது. பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்து கிறிஸ்துமஸ் அன்று சாண்டா க்ளாஸை நீங்கள் ஏன் வரவேற்கக் கூடாது. இந்த கேக் மிகவும் அழகானது மற்றும் மிகவும் ருசி மிகுந்தது.

இது நிச்சயமாக உங்களின் குட்டிகளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் ஆகும். அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் இதை முழுமையாக அனுபவிப்பார்கள். உங்களுக்கு இதை வீட்டிலேயே செய்ய இயலுமா என சந்தேகம் வருவது இயற்கைதான். எங்களை முழுமையாக நம்புங்கள். இது மிகவும் எளிதானது.

இதை உங்களின் வீட்டிலேயே எளிதாக செய்து விட முடியும். உங்களுக்கு உதவுவதற்காக இந்த கேக்கின் செய்முறை மற்றும் அதற்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளோம்.

பறிமாறும் அளவு - 6 துண்டுகள்

தயாரிப்பு நேரம் - 20 நிமிடங்கள்

சமையல் நேரம் - 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

கேக்கிற்கு

1. சாக்லேட் கேக் - 1

2. அடிக்கப்பட்ட கிரீம் - 4 கப்

3. டின் செர்ரிக்கள் - 16 (பகுதிகளாக வெட்டப்பட்டது)

சக்கரை பாகிற்கு

4. சர்க்கரை - ½ கப்

5. தண்ணீர் - ¾ கப்


அழகுப்படுத்துவதற்காக

6. சாக்லேட் சுருள் - 1¼ கப்

7. டின் செர்ரிக்கள் - 10 (முழுமையானது)


செயல்முறை:


1. ஒரு சாக்லேட் கேக்கை அருகில் உள்ள பேக்கரியில் இருந்து வாங்குங்கள். இது எளிதாக கிடைக்கின்றது. மேலும் இதில் முட்டை கிடையாது. இந்த சாக்லேட் கேக்கை 3 அடுக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் கேக்கை ஊற வைக்க சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரில் சக்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

2. பாகிற்கு சுவை சேர்க்க நீங்கள் பிராந்தி, ரம், முதலியனவற்றை சிறிது சேர்க்கலாம். பாகு நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகு அறை வெப்பநிலைக்கு வரும் வரை பாகை குளிர விடவும். இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து நன்கு அடிக்கவும். க்ரீம் பொங்கி பஞ்சு போன்று வரும் வரை க்ரீமை நன்கு அடித்து கலக்கவும்.

3. ஒரு கேக் ஸ்டேண்ட் எடுத்து அதில் ஒரு அடுக்கு கேக் வைக்கவும். இப்போது, அதில் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டும். மேலும் அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து ஒரு அடுக்கு போன்று செய்யவும்.

4. கேக் அடுக்குகளின் மீது தடித்த கிரீம் அடுக்குகளை உருவாக்கவும். மிகவும் கவனமாக கேக்குகளின் மீது க்ரீம் நன்கு பரவும் படி தடவவும். இப்போது, கேக் அடுக்குகளின் மீது செர்ரிகளை சேர்க்க வேண்டும். நீங்கள் முழு செர்ரிகள் அல்லது பாதியாக வெட்டப்பட்ட செர்ரிக்களை பயன்படுத்தலாம்.

5. இப்பொழுது முதல் கேக் அடுக்கின் மீது இரண்டாவது கேக் அடுக்கை உருவாக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட செய்முறைகளை மீண்டும் பின்பற்றவும். இதே போன்று மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கை உருவாக்கவும். அதன் பின்னர், கேக் முழுவதும் பரவும் படி கிரீமை முழுமையாக பரப்பவும். க்ரீம்களை நன்கு சமன்செய்யவும். சாக்லேட் பட்டையை துருவி அதில் இருந்து சாக்லேட் சுருளை உருவாக்குங்கள். அதை வைத்து கேக்கை அலங்கரியுங்கள் மேலும் கேக்கை அலங்கரிக்க செர்ரிக்களை பயன்படுத்தலாம்.


6. இந்த கேக்கின் பக்கவாட்டில் சாக்லேட் சுருள்களை தடவ மறவாதீர்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.


7. பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை சிறிய பகுதிகளாக வெட்டி உங்களின் விருந்தினர்களுக்கு பறிமாறுங்கள்.

English summary

mouth watering black forest cake-recipe for New year and Christmas

mouth watering black forest cake-recipe for New year and Christmas
Desktop Bottom Promotion