Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
மகா சிவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி ரெசிபி
மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடிக்கும் போது, நல்ல ஆரோக்கியமான, அதே சமயம் எளிதில் சமைக்கக்கூடிய உணவை உட்கொண்டு முடிக்கலாம். அதிலும் ஜவ்வரிசி மற்றும் பால் கொண்டு செய்யப்படும் ரெசிபியை சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
இங்கு மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்களுக்காக, ஒரு அருமையான ஜவ்வரிசி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். மேலும் இந்த ரெசிபியை சிவனுக்கு செய்தும் படைக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 3 கப் (ஊற வைத்தது)
பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் - 2
வில்வ இலை - 1 (அரைத்தது)
மாதுளை - 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் - 1/2 (நறுக்கியது)
திராட்சை - 10
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை 8-10 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.
பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நீரில் கழுவி, பாலில் சேர்த்து, 5-10 நிமிடம் குறைவாக தீயில் வேக வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி, ஒரு பௌலில் ஊற்றி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை, நறுக்கிய வாழைப்பழம், வில்வ விழுது மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கையால் நன்கு பிசைய வேண்டும்.
பிறகு அதில் ஆப்பிள், திராட்சை, மாதுளை சேர்த்து கலந்து, விரதத்தை இந்த ஜவ்வரிசி ரெசிபியை சாப்பிட்டு முடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
