For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேணுமா? அப்போ கும்மாயம் தான் பெஸ்ட்!

உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரும் கும்மாயம் என்ற இனிப்பு வகை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

By Staff
|

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - கால் ஆழாக்கு

உளுத்தம் பருப்பு- அரை ஆழாக்கு

பாசிப்பருப்பு- 2 ஆழாக்கு

வெல்லம் - அரை கிலோ

நெய் - 200 கிராம்

செய்முறை:

பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் தனித் தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் நன்கு கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெல்லத்தை ஊற்றவும். நன்றாக தோசை பதத்தில் கரைத்து, அடுப்பில் வைக்கவும்.

நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவு வெந்ததும் பளபளவென்று வரும். வந்தவுடன் இறக்கி விடவும். சூப்பரான கும்மாயம் ரெடி!

English summary

Kummayam recipie

Healthy Sweet Kummayam Making Recipe.
Desktop Bottom Promotion