For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியாக தயாரிக்கலாம் சுவையான தேங்காய் பர்பி!

பண்டிகை காலமோ அல்லது வீட்டிற்கு யாரேனும் உறவினர்கள் வந்தால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இனிப்பு வகைகள் வாங்கி வருவோம்.அப்படி இல்லது எளிதாக வீட்டிலேயே தயாரிக்க செய்முறை விளக்கம்.

By Staff
|

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கோப்பை

சர்க்கரை - 1 கோப்பை

முந்திரிப் பருப்பு - 25 கிராம்

ஏலக்காய் தூள்- 4 (பொடித்தது)

நெய் - 4 ஸ்பூன்.


செய்முறை:

தேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டுபொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகுவைக்கவும்.

பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளறவும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.

பாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பிஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

English summary

Coconut Parpi recipie

Coconut Parpi recipie
Desktop Bottom Promotion