Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ரக்சா பந்தன் ஸ்பெஷல்!!! ஈஸியான... பிரட் பர்பி
வட இந்தியாவில் ரக்சா பந்தன் என்னும் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தங்கைகள் அண்ணன்களுக்கு ராக்கிகளை கட்டிவிட்டு, தங்கள் அன்பை தெரிவித்து வருவார்கள்.
அவ்வாறு ராக்கிகளை கட்டும் போது, அதோடு வீட்டிலேயே ஈஸியாக ஒரு இனிப்பை செய்து அண்ணன்களுக்குக் கொடுத்தால், இந்த நாள் மிகவும் இனிமையானதாக இருக்கும் அல்லவா!!! ஆகவே அத்தகைய மிகவும் விரைவில் செய்யக்கூடிய, ஈஸியான ஒரு இனிப்பு தான், பிரட் பர்பி. சரி, அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
பிரட் தூள் - 2 கப்
பால் - 1 கப்
முந்திரி - 10
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பிரட் தூளை பாலில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்கவும். நீண்ட நேரம் இதனை ஊற வைக்க வேண்டாம். இல்லையென்றால் வதங்கி போய்விடும்.
அந்த 10 நிமிடத்திற்குள், வெல்லத்தை ஒரு வாணலியில் போட்டு, தீயை குறைவாக வைத்து நன்கு கரைக்கவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் விடலாம்.
எப்போது வெல்லம் மென்மையாக, சற்று அடர்த்தியாக வரும் போது, துருவிய தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
இப்போது அந்த பிரட் தூள் மற்றும் பாலை ஊற்றி, நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும். அவ்வாறு கிளறும் போது, நெய் கலவையிலிருந்து தனியாக பிரியும் நேரத்தில் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் முந்திரி பருப்புகளை போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும்.
இறக்கியப் பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடானது ஓரளவு போனப் பின், அதனை வேண்டிய வடிவத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளலாம்.
இப்போது ரக்சா பந்தனுக்கு சுவையான பிரட் பர்பி ரெடி!!!



Click it and Unblock the Notifications
