செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?

Mars Transit In Cancer In September 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார்.

Mars Transit In Cancer In September 2026 Effects On 12 Zodiac Signs

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இதுவரை செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைந்தார். கடகம் செவ்வாயின் நீச்ச ராசியாகும், இது செவ்வாயின் தாக்கத்தை ஓரளவிற்கு குறைக்கக்கூடும்.

இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் கடக ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றலும் செயல்திறனும் குறையக்கூடும். கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திப்பீர்கள். குறிப்பாக ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகள் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயங்களிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுமை மிகவும் அவசியம். இருந்தாலும், நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஒருவேளை ஏற்கனவே வாழ்வில் பிரச்சனை இருந்தால், இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. தொழில், வேலையில் உங்களின் அக்கறை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பண விஷயங்களில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே அவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். ஆகவே இந்த ராசியைச் சேர்ந்த வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எந்த ஒரு திட்டத்தையும் செயல்படும் முன் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புக்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முடிவுகளை எடுக்கும் போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாகவும் வேகமாகவும் முடிவடையும் வாய்ப்புள்ளது. இலக்குகளில் கவனம் செலுத்தினால் கடினமான சூழ்நிலைகளை சிறப்பாக கையாளலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறுசிறு விஷயங்களுக்கு கவலைப்படாமல், சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். புதிதாக எதிலும் முதலீடு செய்யாதீர்கள். அனைவரிடமும் நல்லுறவை பேண முயற்சிக்க வேண்டும். கூடுதல் வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, September 19, 2026, 11:48 [IST]
Desktop Bottom Promotion