பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..

DIY Coffee Face Packs In Tamil: உலகளவில் பெரும்பாலானோர் விரும்பி குடிக்கக்கூடிய ஒரு பானம் தான் காபி. ஒரு கப் காபியானது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் காபி உடலுக்கு வேறு பல நன்மைகளையும் வழங்கும் அதே வேளையில் அந்த காபித் தூளைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும அழகை மேம்படுத்தும்.

10 Most-effective DIY Coffee Face Packs for Glowing Skin

உங்கள் முகம் எப்போதும் டல்லாக இருக்கிறதா? உங்கள் முக அழகை மேம்படுத்த வேண்டுமா? அதுவும் பார்லர் செல்லாமலேயே உங்கள் முகத்தை பிரகாசமாகவும், பளிச்சென்றும் மாற்ற வேண்டுமா? அப்படியானால் காபித் தூளைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். உங்களுக்காக கீழே சில சக்தி வாய்ந்த காபி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

1. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை சம அளவில் எடுத்துக் கொண்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. காபித் தூள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. காபித் தூள் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூளை எடுத்து, கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. காபித் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூளை எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

5. காபித் தூள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூளை எடுத்துக் கொண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

6. காபித் தூள் மற்றும் பால் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

7. காபித் தூள் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு காபித் தூள் மற்றும் சிறிது மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, தயிர் அல்லது தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

8. காபித் தூள் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்னர் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

9. காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் காபித் தூளை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

10. காபித் தூள் மற்றும் முட்டை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் காபித் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, September 19, 2026, 18:07 [IST]
Desktop Bottom Promotion