வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Weekly Horoscope For 20 September 2026 To 26 September 2026 In Tamil

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 2026 செப்டம்பர் 26 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள், சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சூப்பராக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்குவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய தொழிலை தொடங்க இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒரு நல்ல வாரமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அருமையாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தேவையற்ற கவலைகள் மனதில் எழலாம். ஆகவே எதைப் பற்றியும் ஆழமாக சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதால், புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். இருந்தாலும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த வாரத்தில் உங்களின் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்தையும், நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நன்மை பயக்கும் வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் நிதி நிலையும் மேம்படும். பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்கும் முன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை மற்றும் தொழிலில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் நல்ல வெற்றியைப் பெறலாம். இருந்தாலும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றங்களைக் காண்பார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் கலவையானதாக இருக்கும். சிறு வேலையை செய்ய கூட அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று மன அழுத்தம் நிறைந்ததாகவும், பதட்டமாகவும் இருக்கும். வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலட்சியம் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். ஆனால் நிதி விஷயங்கள், குடும்ப விவகாரங்கள், ஆரோக்கியம் என அனைத்தும் சாதகமாகவே இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். எனவே செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலையை முழு கவனத்துடன் செய்தால், நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எனவே இந்த வாரம் அலட்சியத்தை தவிர்த்து, செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்தினால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். சந்தோஷம் பெருகும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த வாரம் அதற்கு சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் வேலை, தொழில் மற்றும் நிதி நிலைமை என அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, September 19, 2026, 21:11 [IST]
Desktop Bottom Promotion