Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Beetroot Pasiparuppu Sambar Recipe In Tamil: மதியம் சாதத்துக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சாம்பார் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இதுவரை பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.

ஆனால் அந்த பீட்ரூட்டைக் கொண்டும் சாம்பார் செய்யலாம் தெரியுமா? அதுவும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் பீட்ரூட் சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இப்படி பீட்ரூட் சாம்பார் செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த பீட்ரூட் பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 3 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பீட்ரூட் பருப்பு
* துருவிய தேங்காய் - 1 கையளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் பொடியாக நறுக்கிய பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பாசிப்பருப்பை 2 முறை கழுவி சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லி, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பீட்ரூட் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பீட்ரூட் பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, 5
நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கையளவு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பீட்ரூட் பாசிப்பருப்பு சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
