Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ரவையும், மைதாவும் இருந்தா இந்த கொங்கு நாடு இனிப்பு சமோசா செய்யுங்க...1 வாரம் வைச்சு ரசிச்சு சாப்பிடலாம்...!
Sweet Samosa Recipe in Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ரவையும், மைதாவும் இருந்தால், அட்டகாசமான சுவையில் மொறுமொறுப்பான இனிப்பு சமோசாவை செய்து கொடுங்கள். இந்த இனிப்பு சமோசா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இந்த இனிப்பு சமோசாவை பொதுவாக கொங்கு பகுதிளில் சோமோஸ் என்று அழைப்பார்கள். இதற்கு உள்ளே வைக்கும் பூரணத்தை நமக்கு பிடித்த வழிகளில் பிடித்த பொருட்களை வைத்து செய்யலாம். மற்ற சமோசாக்களைப் போல அல்லாமல் இது சில நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். எனவே நீண்ட கால ஸ்னாக்ஸை விரும்புபவர்கள் இதை செய்யலாம்.

உங்களுக்கு இந்த சுவையான இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு சமோசாவின் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ரவை - 1/2 கிலோ
- மைதா - 1/2 கிலோ
பூரணம் செய்ய:
- நிலக்கடலை - 100 கிராம்
- பொட்டுக்கடலை - 100 கிராம்
- வெல்லம் - 1/4 கிலோ
- ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அதேபோல பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார். தேவைப்பட்டால் இதனுடன் முந்திரி, திராட்சை, தேங்காய் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம்.
-அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
- சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தேய்த்துக் கொள்ளவும்.
- பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகாக வெட்டவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் தயாராக ஒட்டி ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
- வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்தால் 1 வாரம் கூட வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











