Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Sweet Potato Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அருமையான சுவையில் கொழுக்கட்டை செய்யுங்கள்.

இந்த கொழுக்கட்டை செய்ய எண்ணெயோ, நெய்யோ, அரிசி மாவோ தேவையில்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கும், அவலும் இருந்தாலே சட்டென்று செய்யலாம். முக்கியமாக 10 நிமிடத்தில் செய்துவிடலாம் மற்றும் இந்த கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட.
உங்களுக்கு இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 150 கிராம்
* அவல் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை நீரில் ஒருமுறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பிளெண்டர் அல்லது ஜாரில் சேர்த்து, லேசாக ஒருமுறை தேங்காய்
துருவியது போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அவல்,
துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் 1
சிட்டிகை உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். நீர்
சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு பிசைந்த பின் மூடி வைத்து 5
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் கைகளால் நன்கு பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி,
இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பின் அந்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 5-6
நிமிடம் வேக வைத்து இறக்கி ஓரளவு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து பின் அந்த கொழுக்கட்டைகளை மீண்டும் இறுக்கமாக உருட்டினால்,
சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
