Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி
கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக

கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். அப்படியே ப்ரஷ்ஷான பழங்கள் மட்டும் காய்கறிகளை கொண்டு அதன் மேல் காரசாரமான இந்திய மசாலாக்களை தூவி நம் நாவிற்கு விருந்தளிக்க கூடியது. நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது
மக்காச்சோளம், மாதுளை உடன் அப்படியே லெமன் ப்ளேவருடன் சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுவதோடு புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கிறது. மக்காச் சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயதாகுவதை தடுத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், கூந்தல் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற ஏராளமான நன்மைகளையும் நமக்கு தருகிறது.
இந்த ரெசிபியை ஐந்தே ஐந்து நிமிடத்தில செய்து விடலாம். யுகாதி ஸ்பெஷல் ரெசிபியும் கூட. சுவை மிகுந்த இந்த கொசம்பரியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Recipe By: காவ்யா
Recipe Type: சாலட்
Serves: 2
-
மக்காச்சோளம் - 1 பெளல்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை(நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்-1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு (நுனிக்கியது) - 1 டீ ஸ்பூன்
-
ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்
கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்
சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி
- நீங்கள் ப்ரஷ்ஷான மக்காச்சோளத்தை பயன்படுத்த விரும்பினால் சமைக்காமல் அப்படியே சாலட் உடன் கலந்து கொள்ளுங்கள்.
- இந்த சாலட்டை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சை மிளகாய் சேர்க்காமல் லெமன் ஜூஸ் மட்டும் சேர்த்து கொடுங்கள்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 170 கலோரிகள்
படத்துடன் செய்முறை விளக்கம் :ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்வது எப்படி
ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்
கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்
சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி



Click it and Unblock the Notifications



























