Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
2 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் எண்ணெயில் பொரிக்காம இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Sweet Banana Balls In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது சாப்பிட கேட்பார்களா? அதுவும் உங்கள் குழந்தைகள் தினமும் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட விரும்புவார்களா? மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்து கொடுக்காமல், சற்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் 2 பெரிய வாழைப்பழமும், 1 கப் அரிசியும் இருந்தால், அற்புதமான சுவையில் ஸ்வீட் உருண்டை செய்யலாம். இந்த வாழைப்பழ ஸ்வீட் உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ ஸ்வீட் உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ஸ்வீட் உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வாழைப்பழம் - 2
* புழுங்கல் அரிசி/இட்லி அரிசி - 1 கப்
* முந்திரி - 5
* பாதாம் - 5
* ஏலக்காய் - 3
* துருவிய தேங்காய் - 1 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - சிறிது (துருவியது)
செய்முறை:
* முதலில் வாழைப்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, இட்லி
பாத்திரத்தில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புழுங்கல் அரிசி/இட்லி
அரிசியை போட்டு நிறம் மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி, முந்திரி, பாதாம், ஏலக்காய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோலை நீக்கிவிட்டு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாழைப்பழத்தை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த அரிசி மாவை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
* பின் பிசைந்ததை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தேங்காய் துருவலில்
பிரட்டினால், சுவையான வாழைப்பழ உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications
