சுட்ட கத்திரிக்காய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Sutta Kathirikai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு சட்னி செய்து கொடுங்கள். இப்படி சட்னி செய்யும் போது பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இந்த வகை சட்னியை தாபா கடைகளில் காணலாம். இந்த சட்னி சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், வீட்டில் உள்ளோர் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Sutta Kathirikai Chutney How To Make Brinjal Chutney

உங்களுக்கு சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சுடுவதற்கு...

* பெரிய கத்திரிக்காய் - 1
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்மசித்து வைத்துள்ளதை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பெரிய அளவிலான கத்திரிக்காயை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, ஆங்காங்கு சற்று ஆழமாக கீறி விட வேண்டும்.
* பின் கீறிய இடங்களில் பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாயை சொருகி விட வேண்டும்.
* பின்பு 2 தக்காளியை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அடுப்பில் க்ரில் கம்பியை வைத்து, அதன் மேல் எண்ணெய் தடவிய கத்திரிக்காய் மற்றும் தக்காளியை வைத்து, திருப்பி போட்டு, தோல் உரிந்து வரும் வரை நன்கு சுட்டு, ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க கொள்ள வேண்டும்.
* பிறகு சுட்ட காய்கறிகளில் உள்ள கருப்பான தோல் பகுதியை நீக்கிவிட்டு, காய்கறிகளை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூளை சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மசித்து வைத்துள்ள சுட்ட காய்கறிகளை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 31, 2026, 20:17 [IST]
Desktop Bottom Promotion