Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Summer Special Mango Ladoo Recipe In Tamil: மாம்பழ சீசன் என்பதால் மார்கெட்டுகளில் விலைக்குறைவில் பலவிதமான மாம்பழங்களைக் காணலாம். இந்த மாம்பழ சீசனில் வெறுமனே மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதை விட, அந்த மாம்பழங்களைக் கொண்டு ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், புட்டிங், கேசரி, பாயாசம் என பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைத்து விட வேண்டும். நீங்கள் மாம்பழ பிரியரா? இந்த சீசனில் தினமும் ஒரு மாம்பழத்தையாவது சுவைத்து விடுவீர்களா?

முக்கியமாக உங்களுக்கு லட்டு பிடிக்குமா? அப்படியானால் ஒருமுறை மாம்பழத்தைக் கொண்டு லட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த மாம்பழ லட்டு செய்வது மிகவும் சுலபம். 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம். முக்கியமாக இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. ஒருமுறை இந்த மாம்பழ லட்டுவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், நிச்சயம் சீசன் முடிவதற்கு பலமுறை செய்து விடுவீர்கள். அந்த அளவில் இந்த லட்டு நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.
இந்த மாம்பழ லட்டு குறித்து வித்யா ஸ்ரீனிவாசன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு மாம்பழ லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* மாம்பழ கூழ் - 1/2 கப்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
* பால் பவுடர் - 3 1/2 டேபிள் ஸ்பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
* பவுடர்டு சுகர் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
* டெசிகேட்டட் தேங்காய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
உருகியதும், 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகும் அளவில்
நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் மாம்பழ கூழை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை
குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் 3 1/2 டேபிள் ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி, அல்வா போன்று
நன்கு திரண்டு வரும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் கையில் நெய்யை தடவி, அந்த மாம்பழ கலவையை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து லட்டு போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அந்த லட்டுக்களை டெசிகேட்டட் தேங்காயில் பிரட்டி
எடுத்தால், சுவையான மாம்பழ லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
