Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Summer Special Mango Ice Cream Recipe In Tamil: கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். இப்படி மாம்பழ சீசனில் மாம்பழங்களை வெறுமனே சாப்பிடாமல், அதைக் கொண்டு என்னென்ன ரெசிபிக்களை செய்ய முடியுமோ, அதை செய்து சுவைத்து பார்த்துவிட வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவருமே மாம்பழ பிரியர்களா? அப்படியானால் கொளுத்தும் கோடையில் மாம்பழங்களைக் கொண்டு மில்க்ஷேக், ஸ்மூத்தி, புட்டிங், ஐஸ்க்ரீம் என்று பலவிதமான ரெசிபிக்களை தவறாமல் செய்து சுவைத்துவிடுங்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது மாம்பழ ஐஸ்க்ரீம் குறித்து தான். இந்த மாம்பழ ஐஸ்க்ரீம்மை செய்வது மிகவும் சுலபம். இதற்கு 4 பொருட்கள் இருந்தாலே போதும், அட்டகாசமான சுவையில் செய்துவிடலாம். குறிப்பாக வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யும் போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த மாம்பழ ஐஸ்க்ரீம் குறித்து ஹேமா சுப்ரமணியன் அவர்கள் தனது ஹோம்குக்கிங் தமிழ் என்னும் யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்களுக்கு வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ ஐஸ்க்ரீம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கண்டென்ஸ்டு மில்க் செய்வதற்கு...
* பால் - 500 மிலி
* குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 கப்
ஐஸ்க்ரீம் செய்வதற்கு...
* அல்போன்சா மாம்பழம் - 5
* ஸ்வீட் விப்பிங் க்ரீம் - 400 மிலி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 500 மிலி பாலை ஊற்றி அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் குங்குமப்பூவை கைகளால் நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, மிதமான
தீயில் வைத்து, பால் கெட்டியாகும் வரை 15 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பால் ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைத்தால், கண்டென்ஸ்டு
மில்க் தயார்.
* பின்பு மிக்சர் ஜாரில் 5 மாம்பழங்களின் தோலை நீக்கிவிட்டு
துண்டுகளாக்கி எடுத்துக் கொண்டு, அத்துடன் தயாரித்து வைத்துள்ள
கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ச்சியான ஸ்வீட் விப்பிங்
க்ரீம்மை எடுத்துக் கொண்டு, எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு
நுரைக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து பீட்டர்
கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு விருப்பமான பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள ஐஸ்க்ரீம்மை
சேர்த்து, க்ளிங் வ்ராப் (Cling Wrap) கவர் கொண்டு மூடி, ஃப்ரீசரில்
12 மணிநேரம் வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம் தயார்.



Click it and Unblock the Notifications