Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Mango Milkshake Recipe : ஈஸியான... மாம்பழ மில்க் ஷேக்
நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடுவீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள். இந்த மாம்பழ மில்க் ஷேக் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு சற்று இதமாக இருக்கும்.
மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடுவீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள். இந்த மாம்பழ மில்க் ஷேக் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு சற்று இதமாக இருக்கும்.

உங்களுக்கு மாம்பழ மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ மில்க் ஷேக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாம்பழ துண்டுகள் - 1 கப்
* பால் - 1 1/2 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது)
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* ஐஸ் கட்டிகள் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மாம்பழத் துண்டுகளையும், சர்க்கரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் பாலை ஊற்ற வேண்டும்.
* பின்பு ஐஸ் கட்டிகளை சேர்த்து மூடி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு கெட்டியாக வேண்டுமானால் அதற்கேற்ப பாலை ஊற்றுங்கள். அதுவே நீர் போன்று வேண்டுமானால் சற்று அதிக பாலை ஊற்றுங்கள்.
* இப்போது சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்.
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் இந்த மாம்பழ மில்க் ஷேக்கின் மேல் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களை பொடியாக வெட்டி மேலே தூவிக் கொள்ளலாம்.
* இல்லாவிட்டால், அதன் மேல் ஐஸ் க்ரீம் அல்லது பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகளையும் மேலே தூவிக் கொள்ளலாம். இதனால் மாம்பழ மில்க் ஷேக்கின் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
