Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Summer Special Coconut Ice Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலர் ஜில்லென்று சர்பத், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவோம். அதுவும் குழந்தைகள் கோடைக்காலம் வந்தாலே ஐஸ் க்ரீம்மை தான் அதிகம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டிலும் இப்படிதானா? அப்படியென்றால் ஐஸ் க்ரீம்மை கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே வெறும் 3 பொருட்களைக் கொண்டு தேங்காய் ஐஸ் செய்து கொடுங்கள். இப்படி கோடையில் தேங்காய் ஐஸ் செய்தால், உங்கள் பிள்ளைகள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பெரியவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த ஐஸ் செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை இந்த ஐஸ் செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு தேங்காய் ஐஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் ஐஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* ஃபுல் க்ரீம் பால் - 1/4 லிட்டர் அல்லது 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
செய்முறை:
* முதலில் தேங்காயின் பின்புறத்தில் உள்ள ப்ரௌன் பகுதியை
நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் போட்டு நன்கு துருவல்
போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சோள மாவை எடுத்து, சிறிது நீரை ஊற்றி, கட்டிகளின்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் ஃபுல்
க்ரீம் மில்க்கை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும், அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு
கிளறி விட்டு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு நீரை ஊற்றி நன்கு கிளறி
விட வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாகி நன்கு க்ரீமியாக காட்சியளித்தால், அதில்
அரைத்த தேங்காயில் முக்கால்வாசியை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு
கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஐஸ் ட்ரேயை எடுத்து, அதன் குழிகளில் சிறிது துருவிய தேங்காயை
சேர்க்க வேண்டும்.
* இறுதியாக குளிர வைத்துள்ளதை ட்ரேயில் ஊற்றி, அலுமினியத் தாளை மேலே
வைத்து மூடி, நடுவில் குச்சிகளை சொருகி, ப்ரீசரில் குறைந்தது 8-9
மணிநேரம் செட்டாக விட வேண்டும்.
* 8-9 மணிநேரம் கழித்து அலுமினியத் தாளை நீக்கிவிட்டு, ஐஸ் ட்ரேயில்
உள்ள ஐஸ் குச்சிகளை எடுத்தால், சுவையான தேங்காய் ஐஸ் தயார்.



Click it and Unblock the Notifications
